தே.மு.தி.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்


தே.மு.தி.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
x
திருப்பூர்


திருப்பூர் மாவட்ட தே.மு.தி.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று காலை திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர் மாவட்ட செயலாளர் குழந்தைவேல், வடக்கு மாவட்ட செயலாளர் பிரசாத்குமார், தெற்கு மாவட்ட செயலாளர் ஆறுச்சாமி ஆகியோர் தலைமை தாங்கி பேசினார்கள். மக்களை வாட்டி வதைக்கின்ற விலைவாசி உயர்வை கண்டித்தும், அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ரூ.1,000 வழங்க வேண்டியும், தமிழகத்துக்கு வழங்க வேண்டிய காவிரி நதிநீரை திறக்கக்கோரியும், விவசாய விளைநிலங்களை அழித்து வரும் என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்தும், மின்கட்டண உயர்வால் நலிவடைந்து வரும் திருப்பூர் பின்னலாடை தொழிலை பாதுகாக்க மின்கட்டண உயர்வை வாபஸ் பெறக்கோரியும், தொழிலாளர்களுக்கு கூடுதல் பஸ் வசதி ஏற்படுத்தக்கோரியும், மக்கள் பிரச்சினைகளை கண்டுகொள்ளாத திருப்பூர் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தேசிய முற்போக்கு தொழிற்சங்க பேரவை மாநில துணை செயலாளர் பொன் இளங்கோவன், கட்சியின் மாநில துணை செயலாளர் ஏ.எஸ்.அக்பர் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். இதில் திரளானவர்கள் கலந்துகொண்டனர்.


Next Story