மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
சி.ஐ.டி.யு. மக்களை தேடி மருத்துவ ஊழியர் சங்கம் சார்பில் நேற்று காலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் மாவட்ட தலைவர் மகாலட்சுமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில தலைவர் கிருஷ்ணமூர்த்தி சிறப்புைரயாற்றினார். மக்களை தேடி மருத்துவ ஊழயர்களுக்கு அரசு அறிவுத்துள்ள ரூ.2000 ஊக்கத்தொைகயை உடனே வழங்க வேண்டும். பணி நேரத்தை வரையறை செய்து ஊதியத்தை வங்கி கணக்கில் வழங்க வேண்டும். கவுரவமான பணி சூழலை ஏற்படுத்தி, பணி மறுக்கப்பட்ட ஊழியர்களுக்கு ஊதியத்துடன் பணி வழங்க வேண்டும். போன்ற 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. பின்னர் கோரிக்கை மனு கலெக்டர் கிறிஸ்துராஜிடம் வழங்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜெயலட்சுமி, பொருளாளர் பானுப்பிரியா, துணை தலைவர் டெய்சிராணி, சி.ஐ.டி.யு. திருப்பூர் மாவட்ட தலைவர் மூர்த்தி, துணை தலைவர் பாலன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.