கோபியில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
கோபியில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
கடத்தூர்
கோபியில் உள்ள ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு அலுவலகத்தில் கடந்த 14-ந் தேதி பா.ஜ.க.வினர் பத்திர பதிவு நடைபெறும் இடத்தில் இருந்த தந்தை பெரியார் புகைப்படத்தை அகற்ற வேண்டும் எனவும், பிரதமர் மோடி புகைப்படத்தை வைக்க வேண்டும் என்றும் கூறினர்.
இது குறித்து பதிவாளர் தமிழ்ச்செல்வி அளித்த புகாரின் பேரில், பா.ஜ.க.வை சேர்ந்த 12-க்கும் மேற்பட்டோர் மீது கடந்த 15-ந் தேதி 3 பிரிவுகளின் கீழ் கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். ஆனால் இதுவரை ஒருவர் கூட கைது செய்யப்படாததை கண்டித்தும், வழக்கு பதிவு செய்யப்பட்ட பா.ஜ.க.வினரை கைது செய்ய வலியுறுத்தியும் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கோபி பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சமூக நீதி கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கனங்குறிஞ்சி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கோஷங்களும் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.