தலித் விடுதலை கட்சியினர் ஆர்ப்பாட்டம்


தலித் விடுதலை கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
திருப்பூர்


அவினாசி பகுதியில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்து வருவதாகவும் அதுகுறித்த புகாரின் மீது முறையான நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் இதனால் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை என்று கூறிதலித் விடுதலை கட்சியினர் நேற்று அவினாசி புதுபஸ்நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தலித் விடுதலைக்கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் சகுந்தலி தங்கராஜ் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில பொது செயலாளர் எம்.பி.செங்கோட்டையன் கண்டன உரையாற்றினார். இதில் கட்சி நிர்வாகிகள் இரா மூர்த்தி, ராஜேந்திரன், செல்வன் உள்ளிட்ட திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story