நாடுகாணி தாவரவியல் பூங்காவை பள்ளி மாணவர்கள் சுற்றி பார்க்க ஏற்பாடு
நாடுகாணி தாவரவியல் பூங்காவை பள்ளி மாணவர்கள் சுற்றி பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
நீலகிரி
கூடலூர் தாலுகா நாடுகாணி வனச்சரகம் சார்பில், வன உயிரின பாதுகாப்பு வார விழாவை ஒட்டி பள்ளி மாணவ-மாணவிகளுக்கு வன உயிரின பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி தாவரவியல் பூங்காவில் நடைபெற்றது. கூடலூர் வன கோட்ட உதவி வன பாதுகாவலர் கருப்பையா, பந்தலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு செந்தில்குமார், பேராசிரியர் கந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பின்னர் நாடுகாணி ஜூன்பூல் தாவரவியல் பூங்காவை மாணவர்கள் சுற்றி பார்த்தனர். மேலும் வனவிலங்குகளின் உடல் பாகங்கள் மற்றும் மீன்களின் காட்சியகத்தை மாணவர்கள் கண்டு ரசித்தனர். நிகழ்ச்சியில் வனச்சரகர் வீரமணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story