கண்காணிப்பு கேமரா, கணினி வசதி செய்ய ஏற்பாடு


கண்காணிப்பு கேமரா, கணினி வசதி செய்ய ஏற்பாடு
x

மாவட்டத்தில் உள்ள 54 போலீஸ் நிலையங்களிலும் புகார் கொடுக்க வரும் பொதுமக்கள் நடத்தப்படும் விதம் குறித்து நேரடியாக கண்காணிக்க மாவட்ட போலீஸ் நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது.

விருதுநகர்


மாவட்டத்தில் உள்ள 54 போலீஸ் நிலையங்களிலும் புகார் கொடுக்க வரும் பொதுமக்கள் நடத்தப்படும் விதம் குறித்து நேரடியாக கண்காணிக்க மாவட்ட போலீஸ் நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது.

வரவேற்பு அலுவலர்

தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு அனைத்து போலீஸ் நிலையங்களிலும் புகார் கொடுக்க வரும் பொதுமக்களை வரவேற்று அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் வரவேற்பு அலுவலரை நியமித்துள்ளார். மேலும் அனைத்து போலீஸ் நிலையங்களிலும் முறையாக பொதுமக்கள் புகார் மனுக்களை பெற்று அதன் மீது உரிய நடவடிக்கை உடனடியாக எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

இந்தநிலையில் விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் மாவட்ட முழுவதும் குறிப்பிட்ட நாளில் அனைத்து போலீஸ் நிலையங்களிலும் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடத்த ஏற்பாடு செய்து பொதுமக்கள் தரும் புகார் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

குறைதீர்க்கும் முகாம்

அந்த வகையில் நேற்று முன்தினம் நடந்த குறைதீர்க்கும் முகாமின் போது 181 மனுக்கள் பெறப்பட்டதில் 126 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.

இதனைத்தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள 54 போலீஸ்நிலையங்களிலும் புகார் கொடுக்க வரும் பொதுமக்கள் நடத்தப்படும் விதம் குறித்து நேரடியாக கண்காணிக்க அனைத்து போலீஸ் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா மற்றும் கணினி வசதியுடன் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை செய்ய மாவட்ட போலீஸ் நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது. இதன் மூலம் போலீஸ் நிலையங்களுக்கு வரும் பொதுமக்கள் அதிகாரியிடம் என்ன பேசுகிறார்கள் என்பதும், அதிகாரிகள் கூறும் பதில் ஆகியவை அனைத்தும் முறையாக கண்காணிக்கப்பட வாய்ப்பு ஏற்படும்.

இதன் மூலம் பொதுமக்களின் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை உடனடியாக பாரபட்சம் இல்லாமல் எடுக்கப்பட வாய்ப்பு ஏற்படும் என போலீஸ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Next Story