ஒடிசா ரெயில் விபத்தில் காயமடைந்த தமிழர்களை விமானம் மூலம் அழைத்து வர ஏற்பாடு
ஒடிசா ரெயில் விபத்தில் காயமடைந்த தமிழகத்தைச் சேர்ந்தவர்களை விமானம் மூலம் அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
ஒடிசா ரெயில் விபத்தில் சிக்கிய தமிழகத்தைச் சேர்ந்த 55 நபர்களை முதலுதவி சிகிச்சைக்குப் பின் விமானம் மூலம் தமிழகத்திற்கு அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புவனேஸ்வரில் இருந்து இன்று மாலை தனி விமானம் மூலம் அவர்களை தமிழகம் அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் சென்னையில் 4 அரசு மருத்துவமனைகள் தயார் நிலையில் உள்ளன. மருத்துவர்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் தயார் நிலையில் வைக்க மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும் செங்கல்பட்டு, வேலூர் மருத்துவமனைகளிலும் தீவிர சிகிச்சை பிரிவு, பிணவறைகளை தயார் நிலையில் வைக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story