தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் வரும் 15-ந் தேதி முதல் திருப்பதியில் தரிசனத்திற்கு ஏற்பாடு


தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் வரும் 15-ந் தேதி முதல் திருப்பதியில் தரிசனத்திற்கு ஏற்பாடு
x

சென்னையில் இருந்து தினமும் திருப்பதிக்கு பஸ் போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை:

திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் வரும் 15-ந்தேதி முதல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக சென்னையில் இருந்து தினமும் திருப்பதிக்கு பஸ் போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தரிசனம் செய்ய விருப்பமுள்ள பக்தர்கள் தமிழ்நாடு டூரிசம் என்ற ஆன்லைன் முகவரியில் முன்பதிவு செய்ய வேண்டும். ரூ 300 ஆன்லைன் தரிசன டிக்கெட்டுடன் பஸ் போக்குவரத்து கட்டணத்துடன் முன்பதிவு செய்ய வேண்டும்.

தவிர்க்க முடியாத காரணங்களால் தரிசனத்திற்கு வரமுடியாத பக்தர்கள் தரிசனத்திற்கு 2 நாட்களுக்கு முன்பாக தமிழ்நாடு டூரிசம் இணையதளத்தில் தெரிவிக்க வேண்டும்.

தரிசனத்திற்கு வர இயலாத பக்தர்களுக்கு பதிலாக வேறு பக்தர்களை தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்படும் என தமிழ்நாடு சுற்றுலா துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..


Next Story