மது கடத்தி வந்தவர் கைது


மது கடத்தி வந்தவர் கைது
x

ரெயிலில் மது கடத்தி வந்தவர் கைது செய்யப்பட்டார்.

சேலம்

சூரமங்கலம்:

சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார் ரோந்து சென்றனர். அப்போது ஐலேன்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து ஒருவர் இறங்கினார். அவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அவர், கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் முட்டியம் பகுதியைச் சேர்ந்த ராம்குமார் (வயது 19) என்பது தெரிய வந்தது. அவர் மது பாட்டில்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது. அவரிடம் இருந்து 228 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராம்குமாரை கைது செய்தனர்.


Next Story