மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து சேலத்தில் ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற 142 பேர் கைது

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து சேலத்தில் ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற 142 பேர் கைது செய்யப்பட்டனர்.
சேலம்
சூரமங்கலம்:
மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து திராவிடர் விடுதலை கழகம் சார்பில் நேற்று சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் ெரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் ஏராளமானோர் திரண்டனர். பின்னர் அவர்கள் மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பியதுடன் ெரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற 142 பேரை கைது செய்து திருவாக்கவுண்டனூரில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
Next Story






