சேலத்தில்வாக்கி டாக்கியில் தகவல் பரிமாறி கஞ்சா விற்ற 3 பேர் கைது


சேலத்தில்வாக்கி டாக்கியில் தகவல் பரிமாறி கஞ்சா விற்ற 3 பேர் கைது
x

வாக்கி டாக்கியில் தகவல் பரிமாறி கஞ்சா விற்ற 3 பேரை சேலம் போலீசார் கைது செய்தனர்.

சேலம்

அன்னதானப்பட்டி

வாக்கி டாக்கியில் தகவல் பரிமாறி கஞ்சா விற்ற 3 பேரை சேலம் போலீசார் கைது செய்தனர்.

வாக்கி டாக்கியுடன்...

சேலம் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் ஊத்துக்காடு மலைப்பகுதியில் வாக்கி டாக்கி மூலம் சிலர் பேசி கொண்டிருப்பதாக அன்னதானப்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று போலீசார் அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கிருந்த நபர்கள் வாக்கி டாக்கி மூலம் தகவல்களை தெரிவித்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சா விற்றதாக, தாதகாப்பட்டி சண்முக நகர் சிங்கார முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்த கேசவன் (வயது 35), அன்னதானப்பட்டி வள்ளுவர் நகரைச் சேர்ந்த வில்வேஸ்வரன் (23), தாதகாப்பட்டி சீரங்கன் தெருவை சேர்ந்த நாகராஜன் (20) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 வாக்கி டாக்கிகள், 2 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திடுக்கிடும் தகவல்கள்

இது குறித்து பிடிபட்ட 3 பேரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

ஊத்துக்காடு மலைப்பகுதியில் கஞ்சா விற்பனையை நாங்கள் போலீசாருக்கு தெரியாமல் நடத்த எளிய வழி என்ன என்று யோசித்தோம். அப்படி யோசித்த போது தான், ஆன்லைனில் வாக்கி டாக்கி எளிதா கிடைப்பது தெரியவந்தது. உடனே நாங்கள் 2 வாக்கி டாக்கி வாங்கி கொண்டோம். ஒருவர் மலையடிவாரத்தில் நின்று கொண்டு வாக்கி டாக்கியில் போலீசார் ரோந்து குறித்து தகவல் தெரிவிப்பார்.

மற்ெறாருவர் கஞ்சா வாங்க வருபவரை மலைப்பகுதியில் வாக்கி டாக்கியுடன் பதுங்கி இருக்கும் நபரிடம் அழைத்து வருவார். அவர்களிடம் கஞ்சா கொடுத்து அங்கிருந்து அனுப்பி விடுவோம். போலீசிடம் பிடிபடாமல் இருக்க வாக்கி டாக்கி வாங்கி நாங்கள் பயன்படுத்தினாலும் தற்போது போலீசிடம் சிக்கி கொண்டோம்.

இவ்வாறு அவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.

வாக்கி டாக்கியில் தகவல் பரிமாறி கஞ்சா விற்ற 3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் சேலத்தில் போலீசார் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story