இந்து முன்னணி நிர்வாகி கொலையில் மேலும் 2 பேர் கைது
இந்து முன்னணி நிர்வாகி கொலையில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
போடிப்பட்டி
இந்து முன்னணி நிர்வாகி கொலையில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
படுகொலை
உடுமலை ஏரிப்பாளையம் விஜய் நகரைச் சேர்ந்தவர் குமரவேல். இந்து முன்னணி பிரமுகர். கொடுக்கல், வாங்கல் பிரச்சினையில் குமரவேலை அதே பகுதியை சேர்ந்த ரஞ்சித்குமார் உள்பட சிலர் வெட்டி படுகொலை செய்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவா என்கிற சிவானந்தம், ஆத்தியப்பன், செந்தில் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
இந்த கொலை வழக்கில் தொடர்புடைய சிலர் சென்னை, நெல்லை உள்ளிட்ட பகுதிகளுக்கு தப்பிச் சென்றதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று கொலையாளிகளை தேடி வந்தனர்.
2 பேர் கைது
இந்தநிலையில் கொலையில் சம்பந்தப்பட்ட கன்னியாகுமரி மாவட்டம் கோவளம் அகஸ்தீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த கோவில்ராஜ் என்பவரது மகன் ஜான்சன் (வயது 31), நெல்லை மாவட்டம் சமாதானபுரம் பகுதியைச் சேர்ந்த செல்லத்துரை என்பவரது மகன் நெல்லை மாரி என்ற மாரியப்பன் ( 34) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ரஞ்சித்குமார், கவிதா உள்பட மற்றவர்களைத் தேடி வருகின்றனர்.