போதை ஆசாமிகள் 3 பேர் கைது
போதை ஆசாமிகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை,
மதுரை மதிச்சியம் பகுதியை சேர்ந்த பொன்னுபாண்டி (வயது 23), அழகுபாண்டி (24), பூனை (23), ஆனந்த், ரஞ்சித் ஆகிய 5 பேரும் நண்பர்கள். இவர்கள் நேற்று காலை 3 மோட்டார் சைக்கிள்களில் ஒரு கல்யாணத்திற்கு சென்று விட்டு மது போதையில் மதிச்சியம் சாலையில் வந்ததாக கூறப்படுகிறது. அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த ஆனந்த், ரஞ்சித் ஆகியோர் கீழே விழுந்து காயம் அடைந்தனர். அவர்களை நண்பர்கள் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல அங்கிருந்த ஆட்டோ டிரைவர்களிடம் கேட்டுள்ளனர். அதற்கு டிரைவர்கள் ஆஸ்பத்திரிக்கு செல்ல மறுப்பு தெரிவித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த மற்ற 3 பேரும் அங்கிருந்த ஆட்டோக்களின் கண்ணாடிகளை உடைத்து விட்டு தப்பி விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் மதிச்சியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பொன்னுபாண்டி, அழகுபாண்டி, பூனை ஆகிய 3 பேரை கைது செய்தனர்.