மோட்டார்சைக்கிள் திருடியவர் கைது


மோட்டார்சைக்கிள் திருடியவர் கைது
x

மோட்டார்சைக்கிள் திருடியவர் கைது

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி கீழ் சோமார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஹேமந்த் (வயது 27). இவர் கடந்த 25-ந் தேதி மோட்டார்சைக்கிளை சுங்கச்சாவடி அருகில் ஆவின் பூத் பக்கம் நிறுத்தி இருந்தார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது மோட்டார்சைக்கிளை காணவில்லை. இதுகுறித்து ஹேமந்த் கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில் மோட்டார்சைக்கிளை திருடியது கிருஷ்ணகிரி அருகே பாலிகானூர் பக்கமுள்ள பெல்லம்பள்ளியை சேர்ந்த சக்திவேல் (வயது 47) என தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் திருடப்பட்ட மோட்டார்சைக்கிளை பறிமுதல் செய்தனர்.


Next Story