காவலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்த பீகாரை சேர்ந்த 4 பேர் கைது
அவினாசி அருகே காவலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்த பீகாரை சேர்ந்த 4 பேர் கைது
திருப்பூர்
அவினாசி
அவினாசி அருகே காவலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்த பீகாரை சேர்ந்த 4 பேர் கைது
கொலை மிரட்டல்
அவினாசி அருகே தெக்கலூரில் பனியன் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் காவலாளியாக இளங்கோவன் என்பவரது மகன் சக்திவேல் (வயது 28) வேைல பார்த்து வருகிறார்.
இவர் நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்தபோது அதே நிறுவனத்தில் வேலை பார்க்கும் பீகார் மாநிலத்தை சேர்ந்த ரூலா மேனிடோ (31), சுனில் ராவுத் (29), சுனல் ராணா (38), சமீர் (35) ஆகியோர் சப்பாத்தி ஏண்டா இப்படி காய்ந்துபோயுள்ளது, இதையெல்லாம் உங்கள் நிறுவனத்தில் சொல்லமாட்டிங்களா? என்று தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
4 பேர் கைது
இதுகுறித்து அவினாசி போலீஸ் நிலையத்தில் சக்திவேல் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர்.
Related Tags :
Next Story