சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்க தேசத்தை சேர்ந்த பெண் கைது


சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்க தேசத்தை சேர்ந்த பெண் கைது
x

பல்லடம் அருகே, முறையான ஆவணம் இன்றி சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்க தேசத்தை சேர்ந்த பெண் கைது செய்யப்பட்டார்.

திருப்பூர்

பல்லடம்

பல்லடம் அருகே, முறையான ஆவணம் இன்றி சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்க தேசத்தை சேர்ந்த பெண் கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

சட்டவிரோதமாக தங்கியிருந்த பெண்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளக்கிணர் பகுதியில் வெளிநாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு வெற்றிச்செல்வன் உத்தரவின் பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது கள்ளக்கிணர் மேற்கு தெருவில் இளவரசன் என்பவரது வீட்டில் தங்கி இருந்த வங்கதேசம், டாக்கா நகரைச் சேர்ந்த முகமது சபோலா என்பவரது மகள் சுமி என்கிற லீமா பேகம் (வயது 20) என்பவரை பிடித்து போலீசார் விசாரித்தனர்

ஆவணங்கள்

அப்போது அவர் எந்தவிதமான ஆவணங்களும் இன்றி சட்டவிரோதமாக தங்கி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி சென்னை புழல் சிறையில் அடைக்க அந்தப் பெண் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Related Tags :
Next Story