ஐ.ஏ.எஸ். பயிற்சி மைய கொள்ளையில் தலைமறைவாக இருந்தவர் கைது


ஐ.ஏ.எஸ். பயிற்சி மைய கொள்ளையில் தலைமறைவாக இருந்தவர் கைது
x

ஐ.ஏ.எஸ். பயிற்சி மைய கொள்ளையில் தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டார்.

சேலம்

சூரமங்கலம்:

சேலம் ஸ்டேட் பாங்க் காலனியில் இயங்கி வரும் தனியார் ஐ.ஏ.எஸ பயிற்சி மையம் உள்ளது. இங்கு கடந்த 4-ந் தேதி லாக்கரில் வைத்து இருந்த 9 லட்சத்து 28 ஆயிரத்து 500 ரூபாய் மற்றும் ஒரு செல்போன் திருட்டு போனது. இதுதொடர்பாக சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த கொள்ளையில் ஈடுபட்ட ஜாகீர் அம்மாபாளையம் பகுதியைச் சேர்ந்த சசிகுமார் (வயது19), அதே பகுதியை சேர்ந்த சிவனேசன் (19) ஆகியோரை போலீசார் கைது செய்தனர், அவர்களிடம் இருந்து 4 லட்சத்து 91 ஆயிரம் பணத்தை போலீசார் மீட்டனர். மீதமுள்ள பணம் மற்றும் செல்போன் தலைமறைவான ஜாகீர் அம்மாபாளையத்தை சேர்ந்த அசரப்பிடம் (20) உள்ளதாக கூறப்பட்டது. இதற்கிடையே நாகப்பட்டினத்தில் தலைமறைவாக இருந்த அஸ்ரப்பை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.1 லட்சத்து 95 ஆயிரம் மற்றும் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. பயிற்சி மையத்தில் இருந்து எடுத்து செல்லப்பட்ட வங்கி லாக்கரையும் போலீசார் மீட்டனர்.


Next Story