நாமக்கல்லில், பள்ளி மாணவிகளான அக்காள்-தங்கையை கடத்தி சென்று பலாத்காரம் 2 வாலிபர்கள் போக்சோவில் கைது
நாமக்கல்லில், பள்ளி மாணவிகளான அக்காள்-தங்கையை கடத்தி சென்று பலாத்காரம் 2 வாலிபர்கள் போக்சோவில் கைது
நாமக்கல்லில் பள்ளி மாணவிகளான அக்காள்-தங்ைகயை கடத்தி சென்று பலாத்காரம் செய்த 2 வாலிபர்கள் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
நண்பர்கள்
நாமக்கல் மாவட்டம் கண்டிபுதூர் பகுதியை சேர்ந்த மாதேஷ் என்பவர் மகன் வினோத் (வயது 21). புதன்சந்தை பேட்டை பகுதியை சேர்ந்த வேலன் மகன் சந்தோஷ் (19). நண்பர்களான இவர்கள் 2 பேரும் ஈரோட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் தொழிலாளர்களாக வேலை செய்து வருகின்றனர்.
இவர்கள் கண்டிபுதூர் பகுதியை சேர்ந்த அக்காள்- தங்கைகளான 17 வயது மற்றும் 15 வயது சிறுமிகளை ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து 2 பேரும் சேர்ந்து அக்காள், தங்கைகளை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் தெரிகிறது.
இதற்கிடையில் தங்களது மகள்களை காணாததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இதுகுறித்து பள்ளிபாளையம் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
கைது
இந்த நிலையில் சிறுமிகள் நாமக்கல்லில் உள்ள தனியார் விடுதியில் அடைத்து வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த தனியார் விடுதிக்கு சென்று 2 சிறுமிகளை மீட்டதோடு, அங்கிருந்த வினோத், சந்தோஷ் ஆகியோரை கைது செய்தனர்.
பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில், சிறுமிகள் 2 பேரும் 10-ம் வகுப்பு படிக்கும் அக்காள், 8-ம் வகுப்பு படிக்கும் தங்கை என்பதும், தற்போது அவர்கள் பள்ளி விடுமுறையில் ஈரோட்டில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.
அக்காள், தங்கை இருவரும் வேலை முடிந்து வீட்டுக்கு செல்லும்போது வினோத், தனது நண்பர் சந்தோஷ் உதவியுடன் 2 பேரையும் கடத்தி நாமக்கல்லில் உள்ள தனியார் விடுதியில் அடைத்து வைத்து பலாத்காரம் செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து வினோத், சந்தோஷ் ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.