சிறுமியின் போட்டோவை ஆபாசமாக சித்தரித்து டுவிட்டரில் வெளியிட்ட வாலிபர் கைது
சிறுமியின் போட்டோவை ஆபாசமாக சித்தரித்து டுவிட்டரில் வெளியிட்ட வாலிபர் கைது
நாமக்கல்
ராசிபுரம்:
ராசிபுரம் அருகே உள்ள ஆர்.புதுப்பாளையத்தைச் சேர்ந்த மதியழகன் மகன் அஜித்குமார் (வயது 24). எம்.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துள்ளார். இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியின் போட்டோவை ஆபாசமாக சித்தரித்து டுவிட்டரில் வெளியிட்டதாக கூறப்படுகிறது. இதையறிந்த சிறுமியின் தாயார் ராசிபுரம் இதுகுறித்து அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தில் அஜித்குமாரை கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ராசிபுரம் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
Related Tags :
Next Story