பெண்களிடம் நகை பறித்த 2 பேர் கைது


பெண்களிடம் நகை பறித்த வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர்

பெண்களிடம் நகை பறித்த வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

நகை பறிப்பு

காஞ்சிபுரத்தை சேர்ந்த தாமரைசெல்வி (வயது 49) தனது குடும்பத்தினருடன் 9-ந் தேதி ஊட்டிக்கு செல்லும்போது அவினாசியை அடுத்த ஆட்டையாம்பாளையத்தில் வேனை நிறுத்தி கீழே இறங்கினார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் தாமரைசெல்வியிடம் முகவரி கேட்பது போல் அவர் அணிந்திருந்த 4 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனர்.

இதுபோல் கடந்த 21-ந் தேதி சின்ன கருணை பாளையத்தில் மளிகை கடையில் வியாபாரம் செய்துகொண்டிருந்த பெண் அணிந்திருந்த 1½ பவுன் சங்கிலியை ஒருவர் பறித்து சென்றார். இதுகுறித்த புகார்களின் பேரில் அவினாசி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வந்தனர்.

2 பேர் கைது

இந்த நிலையில் அவினாசி நாதம்பாளையம் பிரிவு அருகே வாகன தணிக்கையில் போலீசார் நேற்று ஈடுபட்ட போது அந்த வழியே மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த 2 பேரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் கோவை சித்தாபுதூரை சேர்ந்த ஜெகநாதன் (27) மற்றும் பீளமேடு லட்சுமிபுரத்தை சேர்ந்த சரவணன் (24) என்பதும் நகைகளை பறித்து சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து சிறை அடைத்தனர். மேலும் அவர்களிடமிருந்த 5½ பவுன் நகை மற்றும் மோட்டார்சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Related Tags :
Next Story