திருச்செங்கோட்டில் பெற்ற மகளையே பலாத்காரம் செய்த தந்தை போக்சோவில் கைது-உடந்தையாக இருந்த தாயாரும் சிக்கினார்


திருச்செங்கோட்டில் பெற்ற மகளையே பலாத்காரம் செய்த தந்தை போக்சோவில் கைது-உடந்தையாக இருந்த தாயாரும் சிக்கினார்
x
தினத்தந்தி 1 July 2022 10:52 PM IST (Updated: 1 July 2022 10:58 PM IST)
t-max-icont-min-icon

திருச்செங்கோட்டில் பெற்ற மகளையே பாலியல் பலாத்காரம் செய்த தந்தை மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த தாயாரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

நாமக்கல்

எலச்சிபாளையம்:

பெற்ற மகளை பலாத்காரம்

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த விசைத்தறி தொழிலாளி ஒருவருக்கு 47 வயது ஆகிறது. இவருடைய மனைவிக்கு 55 வயது ஆகிறது. இவரும் விசைத்தறி தொழிலாளியாக தான் உள்ளார். இவர்கள் இருவரும் வாலிப பருவத்தில் ஒருவரை ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

காதல் மயக்கத்தில் வயது வித்தியாசத்தை ஒரு பொருட்டாக கருதாமல் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இவர்களுடைய மூத்த மகள் பிளஸ்-2 படித்து முடித்து விட்டார்.

இந்த நிலையில் 18 வயதான அந்த மூத்த மகள் திருச்செங்கோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு வந்து அதிர்ச்சி தரும் புகார் ஒன்றை அளித்தார். அதில் தனது தந்தையே தன்னை கட்டாய உறவு கொண்டு பாலியல் பலாத்காரம் செய்து விட்டார். எனது தாயாரும் இதை கண்டுகொள்ளவில்லை என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த புகாரை அடுத்து அந்த மகளின் தந்தை மற்றும் தாயாரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

தந்தை-தாய் கைது

பின்னர் மகள் கொடுத்த புகாரின் பேரில் அவரது தந்தை மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்த அவருடைய மனைவியையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவர்கள் இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் இன்று இரவு வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டனர்.

பெற்ற மகளையே பாலியல் பலாத்காரம் செய்த தந்தையையும், அதற்கு உடந்தையாக இருந்த அவருடைய மனைவியையும் போலீசார் கைது செய்த சம்பவம் திருச்செங்கோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story