குண்டர் சட்டத்தில் ரவுடி கைது


குண்டர் சட்டத்தில் ரவுடி கைது
x

குண்டர் சட்டத்தில் ரவுடி கைது செய்யப்பட்டார்.

சேலம்

சேலம் கோரிமேடு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 28). இவர், ஜெயபிரகாஷ் என்பவரை வழிமறித்து பீர்பாட்டிலால் தாக்கி ரூ.5,500-ஐ பறித்து சென்றுவிட்டார். இதுதொடர்பான புகாரில் ரவுடி மணிகண்டனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுதவிர சின்னகொல்லப்பட்டியை சேர்ந்த விவேகானந்தன் என்பவரை தனது கூட்டாளியுடன் சேர்ந்து மணிகண்டன் தாக்கி உள்ளார். இந்த வழக்கிலும் அவர் கைது செய்யப்பட்டார்.

இதேபோல் மூர்த்தி என்பவரை மிரட்டி பணம் பறித்துள்ளார். தொடர்ந்து இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டதால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கன்னங்குறிச்சி போலீசார் பரிந்துரை செய்தனர். மணிகண்டனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் நஜ்மல் ஹோடா உத்தரவிட்டார்.


Next Story