எருமப்பட்டியில் டிரைவரிடம் பணம் பறித்த வாலிபர் கைது


எருமப்பட்டியில் டிரைவரிடம் பணம் பறித்த வாலிபர் கைது
x

எருமப்பட்டியில் டிரைவரிடம் பணம் பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

நாமக்கல்

எருமப்பட்டி:

எருமப்பட்டி வடவத்தூர் ரோடு பகுதியை சேர்ந்தவர் ராஜசெல்வம் (வயது 42). லாரி டிரைவர். இவர் நேற்று அதிகாலை அங்குள்ள டீக்கடைக்கு சென்று கொண்டிருந்தார். ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே சென்றபோது, மோடார் சைக்கிளில் வந்த வாலிபர் ராஜசெல்வத்தை மறித்தார். பின்னர் அந்த வாலிபர் கத்தியை காட்டி மிரட்டி ரூ.500-ஐ பறித்தார். இதனால் ராஜசெல்வம் சத்தம் போட்டார். அங்கிருந்தவர்கள் வாலிபரை மடக்கி பிடித்து எருமப்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். போலீசாரின் விசாரணையில் வாலிபர், திருச்சி மாவட்டம் தொட்டியம் கோட்டைமேடு அணியா தோப்பு தெருவை சேர்ந்த வெங்கடாசலம் மகன் சந்தோஷ் (27) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.


Next Story