இளம்பெண் அடித்துக்கொலை: மாமனார்- மாமியார் கைது


இளம்பெண் அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில், அந்த பெண்ணின் மாமனார்- மாமியார் கைது செய்யப்பட்டனர்.

சேலம்

சூரமங்கலம்:

சேலம் சூரமங்கலம் அருகே முல்லை நகர் பகுதியைச் சேர்ந்தவர் தியாகலிங்கம். இவருடைய மனைவி ராஜலட்சுமி. இவர்களது மகள் தனுஸ்ரீ (வயது 26). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த கீர்த்திராஜ் (31) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்கள், சேலம் ரெட்டிபட்டியில் தனியாக குடியிருந்து வந்தனர். கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. தகராறில் கீர்த்திராஜ், தன்னுடைய மனைவியை கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்தார். இதுகுறித்து சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கீர்த்திராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே இந்த கொலை தொடர்பாக கோட்டாட்சியர் விஷ்ணுவர்த்தினி விசாரணை நடத்தினார். விசாரணையில் கீர்த்திராஜின் தந்தை பெரியசாமி (60), தாய் ரஞ்சனி (57) ஆகியோர் வரதட்சணை கேட்டு தனுஸ்ரீயை கொடுமை ப்படுத்தியதாக தெரிகிறது. இதைதொடர்ந்து பெரியசாமி, அவருடைய மனைவி இருவரையும் போலீசார் கைது செய்தனர். இதில் பெரியசாமி முன்னாள் ஊர்க்காவல்படை வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story