சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த காய்கறி வியாபாரி கைது
உடுமலை அருகே மனவளர்ச்சி குன்றிய சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த காய்கறி வியாபாரி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
உடுமலை அருகே மனவளர்ச்சி குன்றிய சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த காய்கறி வியாபாரி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
சிறுமி பாலியல் பலாத்காரம்
உடுமலை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி பிளஸ்-2 படித்து வருகிறார். இவர் சற்று மன வளர்ச்சி குன்றிய நிலையில் இருந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டுக்கு செல்வதற்காக சிறுமி பஸ் நிறுத்தத்தில் பஸ்ஸுக்காக காத்து நின்றார்.
அப்போது காய்கறி வியாபாரியான சின்ன பாப்பனூத்து பகுதியைச் சேர்ந்த சிவசாமி என்பவரது மகன் கரிச்சிக்குமார் (வயது 29) அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். அவர் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த சிறுமியை ஏமாற்றி மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்று பொள்ளாச்சி செல்லும் வழியில் காட்டுப் பகுதியில் நிறுத்தியுள்ளார். அங்கு அந்த சிறுமியை கரிச்சிகுமார் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மீண்டும் சிறுமியை மோட்டார் சைக்கிளில் ஏற்றி பஸ் நிறுத்தத்தில் கொண்டு வந்து விட்டுவிட்டுச் சென்றுவிட்டார்.
வியாபாரி கைது
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட அந்த சிறுமி வீட்டுக்கு தாமதமாக வந்ததால் அவருடைய தாய் அது குறித்து விசாரித்த போது சிறுமி நடந்த சம்பவத்தைக் கூறியுள்ளார். இதனையடுத்து சிறுமியின் தாய் உடுமலை மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் வியாபாரி கரிச்சிகுமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.