வடமாநில வாலிபர்களிடம் பணம் மோசடி செய்த 3 பேர் கைது


வடமாநில வாலிபர்களிடம் பணம் மோசடி செய்த 3 பேர் கைது
x

வடமாநில வாலிபர்களிடம் பணம் மோசடி செய்த 3 பேர் கைது

நாமக்கல்

எலச்சிபாளையம்:

ஓடிசா மாநிலத்தை சேர்ந்த அனுப்நாயக் (வயது 21). ஆனந்த் நாயக் (21) ஆகியோர் திருச்செங்கோடு ரூரல் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தனர். அதில் திருச்செங்கோடு அருகே 87 கவுண்டம்பாளையத்தை சேர்ந்த கவின்குமார் (23), சுரேஷ் (33), விட்டம்பாளையத்தை சோந்த ராஜா (30) ஆகியோர் தங்களிடம் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.70 ஆயிரத்தை பெற்று கொண்டு மோசடி செய்து விட்டதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியிருந்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வடமாநில வாலிபர்களிடம் பணம் வாங்கி விட்டு மோசடி செய்ததாக கவின்குமார், சுரேஷ், ராஜா ஆகிய 3 பேரை கைது செய்தனர்.


Next Story