கந்து வட்டி கேட்டு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
கந்து வட்டி கேட்டு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.
திருவாரூர்
மன்னார்குடி சஞ்சீவி தெருவை சேர்ந்தவர் சங்கரநாராயணன் (வயது 41). இவர் வட்டிக்கு பணம் கொடுத்து வாங்கும் தொழில் செய்து வருகிறார். இவரிடம் மன்னார்குடி தாமரை குளம் வடகரையை சேர்ந்த குமார் (32) என்பவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ரூ.15 ஆயிரம் கடன் வாங்கி உள்ளார். இதற்காக கடந்த 6 மாதங்களாக வட்டி கொடுத்து வந்த நிலையில் குமார் நேற்று முன்தினம் ரூ.15 ஆயிரம் அசல் தொகையை சங்கரநாராயணனிடம் திருப்பி அளித்துள்ளார். அப்போது சங்கர நாராயணன் மேலும் ரூ.10 ஆயிரம் வட்டி கூடுதலாக வேண்டும் என கேட்டு குமாரிடம் தகராறில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து குமார் மன்னார்குடி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சங்கரநாராயணன் மீது கந்துவட்டி வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story