லாரியில் டீசல் திருடிய 2 பேர் கைது


லாரியில் டீசல் திருடிய 2 பேர் கைது
x

லாரியில் டீசல் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சேலம்

ஏற்காடு:

ஏற்காடு கீரைகாடு பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் காளியப்பன் (வயது 23), அதே பகுதியை சேர்ந்த பழனிசாமி மகன் மோகனவேல் (21). இவர்கள் இருவரும் ஒண்டிகடை பகுதியில் லாரி நிறுத்தம் மற்றும் அந்த பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த லாரிகளில் டீசல் திருடி உள்ளனர். இதனை பார்த்த டிரைவர்கள், இருவரையும் கையும், களவுமாக பிடித்து ஏற்காடு போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து ஏற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 40 லிட்டர் டீசல் மீட்கப்பட்டது.


Next Story