சட்டக்கல்லூரி மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்தவர் கைது


சட்டக்கல்லூரி மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்தவர் கைது
x

சட்டக்கல்லூரி மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.

சேலம்

கொண்டலாம்பட்டி:

திருப்பூரைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவி ஒருவர், சேலத்தில் சட்டக்கல்லூரி படித்து வந்தார். அந்த மாணவியுடன், திருப்பூரை சேர்ந்த ரகுமான்கான் என்பவரும் படித்து வந்தார். இதற்கிடையே ரகுமான்கான் அந்த மாணவியிடம் தன்னை காதலிக்கும்படி அடிக்கடி தொந்தரவு செய்து வந்ததாக தெரிகிறது. இதுகுறித்து அந்த மாணவி கொடுத்த புகாரின் பேரில் கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து ரகுமான்கானை கைது செய்தனர்.


Next Story