பள்ளி மாணவியை கேலி செய்த அண்ணன்- தம்பி கைது


பள்ளி மாணவியை கேலி செய்த அண்ணன்- தம்பி கைது
x

பள்ளி மாணவியை கேலி செய்த அண்ணன்- தம்பி கைது செய்யப்பட்டனர்.

சேலம்

ஓமலூர்:

ஓமலூரை அடுத்த கோட்டை மாரியம்மன் கோவில் ஊராட்சி செட்டியப்பனூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவருடைய மகன்கள் சிவமுருகன் (வயது 22), மாயக்கண்ணன் (25). இவர்கள், இருவரும் அதே பகுதியை சேர்ந்த 17 வயது மாணவியை கேலி, கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் ஓமலூர் போலீசார் விசாரணை நடத்தி அண்ணன்- தம்பி இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே தலைமறைவாக இருந்த சிவமுருகன், மாயக்கண்ணன் இருவரையும் 4 மாதங்களுக்கு பிறகு போலீசார் நேற்று கைது செய்தனர்.


Next Story