குற்றச்செயல்களில் ஈடுபட்ட ரவுடி மீது 7-வது முறையாக குண்டர் சட்டம் பாய்ந்தது


குற்றச்செயல்களில் ஈடுபட்ட ரவுடி மீது 7-வது முறையாக குண்டர் சட்டம் பாய்ந்தது
x

குற்றச்செயல்களில் ஈடுபட்ட ரவுடி மீது 7-வது முறையாக குண்டர் சட்டம் பாய்ந்தது.

சேலம்

சேலம் பனங்காடு பகுதியை சேர்ந்த ஏழுமலை என்பவர் கடந்த 8-ந் தேதி கரும்பாலை பஸ் நிறுத்தம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சேலம் சின்னதிருப்பதி பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி சித்தேஸ்வரன் (வயது 40) அவரை வழிமறித்தார். பின்னர் கத்தியை காட்டி மிரட்டி ஏழுமலையிடம் இருந்து ரூ.3 ஆயிரத்தை பறித்துவிட்டு சென்றார்.

இதுதொடர்பாக கருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சித்தேஸ்வரனை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். போலீஸ் விசாரணையில், அவர் மீது ஏற்கனவே கொலை, வழிப்பறி, ஆள்கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் பல்வேறு போலீஸ் நிலையங்களில் பதிவாகி இருந்ததும், கடந்த 2010, 2013, 2014, 2016, 2017 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதாகி இருந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் சித்தேஸ்வரனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் துணை கமிஷனர் மாடசாமி, கமிஷனருக்கு பரிந்துரை செய்தார்.

இதை பரிசீலித்து 7-வது முறையாக சித்தேஸ்வரனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா உத்தரவிட்டார். இதற்கான ஆணையை சிறையில் உள்ள அவரிடம் அதிகாரிகள் வழங்கினர்.


Next Story