ஜாமீனில் வந்து தலைமறைவானவர் கைது
சேலத்தில் ஜாமீனில் வந்து தலைமறைவானவர் கைது செய்யப்பட்டார்.
சேலம்
சேலம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 35). கடந்த 2019-ம் ஆண்டு நடந்த 2 வழிப்பறி வழக்குகளில் இவரை போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். அதன்பிறகு அவர் ஜாமீனில் வெளியே வந்தார். ஆனால் வழக்கு விசாரணை தொடர்பாக கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்து வந்ததால் அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து ரவியை போலீசார் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்தநிலையில் ஜாமீனில் வெளியே வந்து தலைமறைவாக இருந்த அவரை நேற்று அம்மாப்பேட்டை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Related Tags :
Next Story