லாட்டரிசீட்டு விற்ற 2 பேர் கைது


லாட்டரிசீட்டு விற்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 27 Aug 2022 6:22 PM GMT (Updated: 27 Aug 2022 6:47 PM GMT)

லாட்டரிசீட்டு விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் பஜார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராமு தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அரண்மனை பகுதியில் நின்றிருந்த 2 பேர் போலீசை கண்டதும் தப்பி ஓட முயன்றனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை மடக்கி பிடித்து சோதனையிட்டனர். அப்போது அவர்களிடம் அரசால் தடைசெய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் 150 மற்றும் லாட்டரி விற்பனை செய்த பணம் ரூ.500 இருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக பி.கே.சாமி தெருவை சேர்ந்த சரவணன் (வயது 52), திவான் நாராயணசாமி தெருவை சேர்ந்த ராமசாமி (53) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.


Next Story