கரூரில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு செல்ல முயன்ற 40 பா.ஜ.க.வினர் கைது


கரூரில் நடைபெற இருந்த  ஆர்ப்பாட்டத்திற்கு செல்ல முயன்ற 40 பா.ஜ.க.வினர் கைது
x

கரூரில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு செல்ல முயன்ற 40 பா.ஜ.க.வினர் கைது

நாமக்கல்

பரமத்திவேலூர்:

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியை கண்டித்து பா.ஜ.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்தது. இதில் கலந்து கொள்வதற்காக நாமக்கல், திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பா.ஜ.க.வினர் கரூருக்கு செல்ல உள்ளதாக பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கலையரசன் தலைமையில், வேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரம்மாள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் நாமக்கல்லில் இருந்து கரூர் செல்லும் பைபாஸ் சாலையில் பரமத்திவேலூர் பிரிவு சாலை அருகே தடுப்புகள் அமைத்து அனைத்து வாகனங்களையும் சோதனை மேற்கொண்டனர்.

அதில் கரூரில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்ற நாமக்கல், திருச்செங்கோடு, பரமத்தி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பா.ஜ.க.வினர். 40 பேரை பரமத்திவேலூர் போலீசார் கைது செய்து காவிரி சாலையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

இதனிடையே கரூரில் நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதால் கைது செய்யப்பட்ட 40 பேரும் விடுவிக்கப்பட்டனர்.. திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பா.ஜ.க வினர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story