கஞ்சா கடத்தல் வழக்கில் சிக்கிய 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
கஞ்சா கடத்தல் வழக்கில் சிக்கிய 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
சேலம்
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் வட்டவடை பகுதியை சேர்ந்தவர் அருள்பாண்டி (வயது 35). சிவகங்கை மாவட்டம் திருபுவனம் தாலுகா தவத்தானேந்தல் பகுதியை சேர்ந்தவர் சின்னபாண்டி மகன் வெள்ளையன் (20). இவர்கள் 2 பேரும் கடந்த ஜூலை மாதம் 12-ந் தேதி ரெயிலில் கஞ்சா கடத்திய வழக்கில் இரும்பாலை போலீசாரால் கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய சேலம் மாநகர துணை போலீஸ் கமிஷனர் மாடசாமி, போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து போலீஸ் கமிஷனர் நஜ்மல்ஹோடா உத்தரவிட்டார். இதையடுத்து சேலம் சிறையில் உள்ள அருள்பாண்டி, வெள்ளையன் ஆகிய 2 பேரிடம் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான நகலை போலீசார் வழங்கினர்.
Related Tags :
Next Story