ஓசூர் வழியாக மதுரைக்கு 100 கிலோ குட்கா கடத்தல்; ஒருவர் கைது கார் பறிமுதல்
பெங்களூருவில் இருந்து ஓசூர் வழியாக மதுரைக்கு 100 கிலோ குட்கா கடத்தியவர் கைது செய்யப்பட்டார். கார் பறிமுதல் செய்யப்பட்டது.
ஓசூர்
பெங்களூருவில் இருந்து ஓசூர் வழியாக மதுரைக்கு 100 கிலோ குட்கா கடத்தியவர் கைது செய்யப்பட்டார். கார் பறிமுதல் செய்யப்பட்டது.
வாகன சோதனை
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வழியாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், குட்கா போன்றவை கடத்தி செல்வதை தடுக்கும் வகையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று மாலை ஓசூர் சிப்காட் போலீசார் ஜூஜூவாடி சோதனைச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
கைது
அப்போது காரின் உள்ளே 100 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவற்றை காருடன் பறிமுதல் செய்தனர். குட்கா பொருட்களின் மதிப்பு ரூ.20 ஆயிரம் ஆகும்.
மேலும் விசாரணையில் மதுரையை சேர்ந்த அசோக் (வயது 46) என்பவர் விற்பனைக்காக பெங்களூருவில் இருந்து ஓசூர் வழியாக மதுரைக்கு குட்கா பொருட்களை கடத்த முயன்றது தெரியவந்தது. இதையடுத்து அசோக்கை போலீசார் கைது செய்தனர்.