போலி சித்த மருத்துவர் கைது

போலி சித்த மருத்துவர் கைது செய்யப்பட்டார்.
மதுரை
மதுரை கோரிப்பாளையம் பள்ளிவாசல் பகுதியை சேர்ந்தவர் சையது சுல்தான் மொகைதீன். இவர், அந்த பகுதியில் வர்ம வைத்தியசாலை நடத்தி வந்தார். இவர், போலியாக மருத்துவம் பார்ப்பதற்காக மதுரை மாவட்ட இணை இயக்குனர் லதாவுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அவர் தலைமையில் மருத்துவ குழுவினர் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அவர் சித்த மருத்துவம் பார்க்க தகுதி இல்லாதவர் என்பதும், போலியாக மருத்துவம் பார்த்ததும் தெரியவந்தது. எனவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி தல்லாகுளம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில், சையது சுல்தான் மொகைதீன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story