தப்பியோடிய கைதி மீண்டும் சிக்கினார்
தப்பியோடிய கைதி மீண்டும் கைது செய்யப்பட்டார்.
காரைக்குடி,
உலகம்பட்டி போலீஸ் சரகம் மின்னல் மலைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 24). இவரை திருப்பத்தூர் அனைத்து மகளிர் போலீசார் கற்பழிப்பு வழக்கில் கைது செய்தனர். பின் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்கு முன் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்றனர். அப்போது அவருக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது. பின்னர் அவர் காரைக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அப்போது உதயகுமார் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். காரைக்குடி தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இந்நிலையில் உதயகுமார் உலகம்பட்டி அருகே பதுங்கி இருந்தபோது போலீசார் அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட உதயகுமார் மீண்டும் மருத்துவ பரிசோதனைக்கு கொண்டு செல்லபட்டார். அவருக்கு கொரோனா இல்லை என தெரியவந்தது. பின்னர் உதயகுமார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்.