மூட்டை தூக்கும் தொழிலாளியை விபசாரத்திற்கு அழைத்த லாட்ஜ் உரிமையாளர், மேலாளர் கைது

மூட்டை தூக்கும் தொழிலாளியை  விபசாரத்திற்கு அழைத்த லாட்ஜ் உரிமையாளர், மேலாளர் கைது
x
தினத்தந்தி 29 Sept 2022 12:15 AM IST (Updated: 29 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

மூட்டை தூக்கும் தொழிலாளியை விபசாரத்திற்கு அழைத்த லாட்ஜ் உரிமையாளர், மேலாளர் கைது

நாமக்கல்

நாமக்கல் மாவட்டம் காளப்பநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் கருப்பண்ணன் (வயது 54). மூட்டை தூக்கும் தொழிலாளி. இவரை நாமக்கல்லில் உள்ள தனியார் லாட்ஜ் மேலாளர் கதிர்வேல் (49) பெண்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என அழைத்து சென்றதாகவும், அந்த லாட்ஜ் உரிமையாளர் ராக்கியண்ணன் (72) விபசாரத்திற்கு விலை பேசியதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து கருப்பண்ணன் நாமக்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் கதிர்வேல், ராக்கியண்ணன் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story