புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது


புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது
x
தினத்தந்தி 17 Oct 2022 12:15 AM IST (Updated: 17 Oct 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிவகங்கை

காரைக்குடி,

காரைக்குடி பகுதிகளில் புகையிலை பொருட்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாகவும், பதுக்கி வைத்திருப்பதாகவும் போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையிலான ரவுடிகள் ஒழிப்பு சிறப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் ரோந்து சென்றபோது காரைக்குடி செஞ்சை அவ்வையார் தெருவில் உள்ள வீட்டு மாடியில் பதுக்கி வைத்திருந்த 145 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதை வைத்திருந்த சின்னசாமியை கைது செய்தனர்.

அதேபோல செட்டிநாடு பகுதிகளில் 7 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து சோலைமலை, சண்முகம் ஆகியோரை கைது செய்தனர்.


Related Tags :
Next Story