நாமகிரிப்பேட்டை அருகே மாடு திருடிய 2 பேர் கைது


நாமகிரிப்பேட்டை அருகே மாடு திருடிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 23 Oct 2022 12:15 AM IST (Updated: 23 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

நாமகிரிப்பேட்டை:

நாமகிரிப்பேட்டை அருகே உள்ள ஆயில்பட்டி ஊராட்சியை சேர்ந்தவர் முத்தாயி (வயது 60). இவர் 4 பசு மாடுகளை வளர்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வளர்த்து வந்த பசு மாடு ஒன்று திருடப்பட்டது. இதுகுறித்து முத்தாயி ஆயில்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாடு திருடிய அருணாசலம் (35), பிரகலாதன் (30) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் மங்களபுரம் அருகே உடம்பு கிராமத்தில் மாடு மீட்கப்பட்டது.


Next Story