பாட்டிலில் பெட்ரோல் கொடுக்காததால் 'ஸ்வைப்பிங்' கருவியை திருடிய வாலிபர் கைது


பாட்டிலில் பெட்ரோல் கொடுக்காததால் ஸ்வைப்பிங் கருவியை திருடிய வாலிபர் கைது
x

பாட்டிலில் பெட்ரோல் கொடுக்காததால் ‘ஸ்வைப்பிங்’ கருவியை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

சேலம்

சேலம் லீ பஜார் அருகே பெட்ரோல் விற்பனை நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு வாலிபர் ஒருவர் பாட்டிலில் பெட்ரோல் வாங்குவதற்கு வந்தார். அப்போது அங்கிருந்த ஊழியர்கள் அவருக்கு பெட்ரோல் கொடுக்க மறுத்து விட்டனர். மறுநாள் காலை ஊழியர்கள் பணிக்கு வந்த போது அங்கிருந்த 'ஸ்வைப்பிங்' கருவி திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது பாட்டிலில் பெட்ரோல் வாங்க வந்த வாலிபர் தான் ஸ்வைப்பிங் கருவியை திருடி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் போலீசார் விசாரணையில் அந்த வாலிபர் கருப்பூர் பகுதியை சேர்ந்த சஞ்சய் (வயது 21) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story