பள்ளிபாளையம் அருகே தொழிலாளிகளிடம் பணம் பறித்த 3 பேர் கைது
பள்ளிபாளையம் அருகே தொழிலாளிகளிடம் பணம் பறித்த 3 பேர் கைது
நாமக்கல்
பள்ளிபாளையம்:
பள்ளிபாளையம் அருகே உள்ள பாப்பம்பாளையத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 33). தொழிலாளி. இவர் நேற்று காலை 5 மணி அளவில் அதே பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சசிகுமார் (28), தியாகி (25) ஆகியோர் கார்த்திகேயனை மிரட்டி அவரை தாக்கி ரூ.500-ஐ பறித்து கொண்டனர். இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில் பள்ளிபாளையம் போலீசார் பணம் பறித்த சசிகுமார், தியாகி ஆகியோரை கைது செய்தனர்.
இதேபோல் வெப்படை அருகே உள்ள நத்தமேடு பகுதியை சேர்ந்தவர் கவின். மில் தொழிலாளி. இவர் பீகார் மாநிலத்ைத சேர்ந்த 2 தொழிலாளிகளை மிரட்டி தாக்கி ரூ.500 பறித்து கொண்டார். இதுகுறித்த புகாரின்பேரில் வெப்படை போலீசார் பணம் பறித்த கவினை கைது செய்தனர்.
Related Tags :
Next Story