பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் அவரை திருமணம் செய்து கொள்ள தாலியுடன் ஆஸ்பத்திரிக்கு வந்தபோது போக்சோ சட்டத்தில் கைது
திருப்பூர் அருகே பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் அவரை திருமணம் செய்து கொள்ள தாலியுடன் ஆஸ்பத்திரிக்கு வந்தபோது போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
திருப்பூர் அருகே பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் அவரை திருமணம் செய்து கொள்ள தாலியுடன் ஆஸ்பத்திரிக்கு வந்தபோது போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.திருப்பூர் அருகே பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் அவரை திருமணம் செய்து கொள்ள தாலியுடன் ஆஸ்பத்திரிக்கு வந்தபோது போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
பிளஸ்-2 மாணவியுடன் காதல்
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியைச் சேர்ந்த ராஜமாணிக்கம் என்பவரது மகன் கார்த்திக் (வயது 26). இவர் திருப்பூர் முருகம்பாளையம் தந்தை பெரியார் நகர் பகுதியில் வாடகை வீட்டில் குடியிருந்து அதே பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், பிளஸ்-2 படிக்கும் மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கமானது நாளடைவில் காதலாக மாறியது.
இந்த நிலையில் ஆசை வார்த்தை கூறி அந்த மாணவியுடன் கார்த்திக் உல்லாசமாக இருந்துள்ளார். இதைத் தொடர்ந்து நாளடைவில் மாணவியின் வயிறு பெரிதாகி வந்ததால் அவரது பாட்டி சந்தேகம் அடைந்து மாணவியை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்தார். அப்போது மாணவி 3 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பாட்டி கருவை கலைத்து விடுமாறு மருத்துவரிடம் தெரிவித்துள்ளார்.
தாலியுடன் வந்த வாலிபர் கைது
இது குறித்து மருத்துவர்கள் திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் அங்கு சென்று விசாரணை மேற்கொண்ட போலீசார், 16 வயதே ஆன சிறுமியை ஏமாற்றி கர்ப்பம் ஆக்கிய நபர் குறித்து விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையில் அந்த மாணவியை திருமணம் செய்து கொள்வதற்காக தனது குடும்பத்துடன் வாலிபர் கார்த்திக் தாலி வாங்கிக்கொண்டு அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளார்.
இதை அறிந்து அங்கு வந்த மகளிர் போலீசார் வாலிபர் கார்த்திக்கை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
திருமணம் செய்து கொள்ளும் ஆசையில் தாலியுடன் வந்த வாலிபரை போலீசார் கைது செய்த சம்பவம் அரசு மருத்துவமனையில் பரபரப்பை ஏற்படுத்தியது.