ஓட்டல் உரிமையாளரிடம் பணம் பறித்த முதியவர் கைது


ஓட்டல் உரிமையாளரிடம் பணம் பறித்த முதியவர் கைது
x

ஓட்டல் உரிமையாளரிடம் பணம் பறித்த முதியவர் கைது செய்யப்பட்டார்.

சேலம்

சூரமங்கலம்:

சேலம் ஜாகீர் அம்மாபாளையம் மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் அர்ச்சுனன். இவரது மகன் குமார் (வயது 31). ஓட்டல் உரிமையாளர். இவர் தனது ஓட்டலில் வேலைக்கு ஆட்களை அழைத்து வருவதற்காக கந்தம்பட்டி கோனேரிக்கரை அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மர்ம நபர், குமாரை வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ.1,500-யை பறித்து சென்று விட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த நிலையில் வழிப்பறியில் ஈடுபட்டதாக கள்ளக்குறிச்சியை சேர்ந்த ரகு (62) என்பவரை கைது செய்தனர்.


Next Story