விபசார வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத மக்கள் தேசம் கட்சி மாவட்ட செயலாளர் கைது
விபசார வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத மக்கள் தேசம் கட்சி மாவட்ட செயலாளர் கைது செய்யப்பட்டார்.
சேலம்
ஆத்தூர்:
ஆத்தூர் மந்தைவெளி பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 44). இவர் மக்கள் தேசம் கட்சியின் சேலம் கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார். கடந்த 2021-ம் ஆண்டு பெண்களை வைத்து விபசாரம் செய்ததாக ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனை கைது செய்தனர். இந்த வழக்கு ஆத்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவர், வழக்கு விசாரணைக்கு சரிவர ஆஜராகவில்லை என கூறப்படுகிறது. எனவே அவர், ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்ய போலீசாருக்கு மாஜிஸ்திரேட்டு முனுசாமி உத்தரவிட்டார். அதன்பேரில் ஆத்தூர் போலீசார் சரவணனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்து சேலம் சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story