சேலம் சீலநாயக்கன்பட்டியில் மொபட் திருடியவர் கைது
சேலம் சீலநாயக்கன்பட்டியில் மொபட் திருடியவர் கைது செய்யப்பட்டார்.
சேலம்
அன்னதானப்பட்டி:
மல்லூர் தாசநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் வசந்தகுமார். இவருடைய மனைவி புவனா (வயது 35). இவர் நேற்று முன்தினம் மாலை தனது மொபட்டில் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் பகுதியில் உள்ள பேக்கரி கடைக்கு தின்பண்டங்கள் வாங்க வந்துள்ளார். வேலை முடிந்து மீண்டும் திரும்ப வந்து பார்த்த போது வண்டியை அங்கு காணவில்லை. இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். போலீசாரின் தொடர் விசாரணையில், சூரமங்கலம் பனங்காடு அருகே உள்ள ஆண்டிப்பட்டி பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு (38) என்பவர் மொபட்டை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story