உறுதிமொழி பத்திரத்தை மீறி தகராறில் ஈடுபட்ட 2 ரவுடிகள் கைது


உறுதிமொழி பத்திரத்தை மீறி தகராறில் ஈடுபட்ட 2 ரவுடிகள் கைது
x

உறுதிமொழி பத்திரத்தை மீறி தகராறில் ஈடுபட்ட 2 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.

சேலம்

சேலம் கிச்சிப்பாளையம் கஸ்தூரிபாய் தெருவை சேர்ந்தவர்கள் சுந்தரபாண்டியன் (வயது 31), கிருஷ்ணன் (33). ரவுடிகளான இவர்கள் திருந்தி வாழும் வகையில் 110 சட்டப்பிரிவின் கீழ் இனிமேல் எந்த பிரச்சினையிலும் ஈடுபட மாட்டோம் என போலீஸ் உயர்அதிகாரிகளிடம் உறுதிமொழிபத்திரம் எழுதி கொடுத்திருந்தனர். ஆனால் அதனை மீறி அவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் தகராறில் ஈடுபட்டனர்.

இதனால் அவர்களை கிச்சிப்பாளையம் போலீசார் பிடித்து துணை போலீஸ் கமிஷனர் லாவண்யா முன்பு ஆஜர்படுத்தினர். அங்கு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் சுந்தரபாண்டியன், கிருஷ்ணன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைக்க போலீசாருக்கு துணை கமிஷனர் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story