தூய்மை பணியாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண் கைது
தூய்மை பணியாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண் கைது செய்யப்பட்டார்.
நாகப்பட்டினம்
நாகை முதலாவது கடற்கரை சாலையில் நகராட்சி ஊழியர் குடியிருப்பை சேர்ந்தவர் மோகன்தாஸ் (வயது40). இவர் நாகை நகராட்சி தூய்மை பணியாளர். நகராட்சி பணியாளர்கள் ஆணையரின் உத்தரவின்பேரில், சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றித் திரிந்த மாடுகளை பிடித்து நகராட்சி அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். இந்த நிலையில் நகராட்சி அலுவலகத்திற்கு வந்த காடம்பாடி பகுதியை சேர்ந்த மாதவன் மகள் லாவண்யா (22) என்பவர் தனது மாட்டை எப்படி பிடித்து வரலாம் என கூறி, மோகன்தாஸை திட்டி, பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து மோகன்தாஸ் வெளிப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாவண்யாவை கைது செய்தனர்.
Related Tags :
Next Story