செல்போன் கடையில் திருடியவர் கைது


செல்போன் கடையில் திருடியவர் கைது
x

செல்போன் கடையில் திருடியவர் கைது செய்யப்பட்டார்.

ராமநாதபுரம்

சாயல்குடி,

ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை உத்தரவின்படி கீழக்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷ், சாயல்குடி இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா தலைமையில் தனிப்படை போலீசார் சாயல்குடி பகுதியில் கடைகளில் நடந்த திருட்டு தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்து நகரைச் சேர்ந்த பாக்கியநாதன் மகன் முனீஸ்வரன் (வயது24) என்பவரை பிடித்து விசாரணை செய்ததில் திருடியதைஒப்புக் கொண்டார். சாயல்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சல்மோன் வழக்குப்பதிவு செய்து முனீஸ்வரனை கைது செய்தார். மேலும் 13 மெமரி கார்டு, 10 பென் டிரைவ், செல்போன்களை பறிமுதல் செய்தனர். திருட்டுக்கு உடந்தையாக இருந்த விக்னேஷ் என்பவரை சாயல்குடி போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story